புதிய சிந்தனை, புதிய புதிய முயற்சிகள், தமிழக மக்களின் நலன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, நாம் அமைக்க போவது புதியதோர் அரசியல் பாதை.
நம் கொள்கை, நம் நோக்கம், நம் செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களின் அடிப்படை தேவை , அதற்கான செயல் திட்டம், கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், விவசாயிகள் நலன் , நீர் நிலைகள் மேலாண்மை, வானியல், புவிசார் ,கடல்சார், மண்வளம், காடுகள் மற்றும் இயற்கைவளங்களை பாதுகாத்தல், ஏற்ற தாழ்வு இல்லாத சமுதாயம் அமைத்தல், கலாசாரம், கலை, இலக்கியம், ஓவியம், நாட்டியம், விளையாட்டு ஆகியவற்றை மேம்படுத்துதல், நம் பாரம்பரிய உணவு முறை, இயற்கை விவசாயம், உடல்நலம், மனநலம், பொருளாதாரம் சார்ந்த புதிய புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை பூர்த்தி செய்வது நமது இலக்கு.
நம் நோக்கம் ஏதிர்கால இளைஞர் நலன் சார்ந்தது.
நம் மறுமலர்ச்சி ஜனதா கட்சி ஏழை, எளிய, நடுத்தர மக்களின் ஏதிர்காலத்தை காக்க உருவான இயக்கம். நம் முன்னேற்ற பாதையில் சதி வலைகள் இருக்கலாம். அதை தகர்த்தெறிவோம்.
இளைஞர்களுக்கான புதிய அரசியல் பாதை அமைக்கும் பணியை தொடருவோம்.
நாம் பயணிக்கும் பாதையில் கல் முள் கரடு முரடு இருக்கும். நமக்கு இடையூறாக இருப்பவர்கள் நமக்கு மட்டுமல்ல, தமிழ் சமூக வளர்ச்சிக்கும் தடையாக இருப்பவர்கள். புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை உணர்ந்து வெற்றி பாதையை நோக்கி பயணிப்போம்!
ஒன்றுபடுவோம்! வெற்றிபெறுவோம்!!
S.ஜெயக்குமார்
நிறுவனர் -மாநில தலைவர்
செயல்பாடுகள் - படங்கள்
30.11.2025 - சேலம் - ஓமலூர்
சேலம் மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் சார்பில், மாநிலத் தலைவர் ச. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில், சேலம் மாவட்டத்தில் ஓமலூரில் "மக்களோடு மக்களாக" என்ற மாபெரும் மக்கள் சந்திப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில்
சேலம் மாவட்டத் தலைவர் திரு பி வெங்கடசுப்பிரமணி மற்றும் திரு முருகேஸ்வர் மாநில செயலாளர் மற்றும் பார்வையாளர் மற்றும் நிர்வாகிகள் மற்றும் கட்சித்தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர் இதில் தலைவர் ச.ஜெயக்குமார் பல்வேறு நலத்திட்ட உதவிகளை எளிய மக்களுக்கு வழங்கினார்.
சேலம் மாவட்டத்தில் மாபெரும் எழுச்சி பெற்றுள்ளது மறுமலர்ச்சி ஜனதா கட்சி
23.11.2025 கிருஷ்ணகிரி: மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் சார்பில், மாநிலத் தலைவர் ச. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில், கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் "மக்களோடு மக்களாக" என்ற மாபெரும் மக்கள் சந்திப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தீவிரமாக நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் பழனிச்சாமி அவர்களின் சிறப்பான தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டங்கள், அனைத்துப் பகுதிகளிலும்
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, நாகரசம்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்வு மிகுந்த எழுச்சியுடன் காணப்பட்டது.
மாநிலத் தலைவர் ஜெயக்குமார் அவர்கள், ஏழை எளிய மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்குத் தொகுதி வாரியாக நூற்றுக்கும் மேற்பட்ட நலத்திட்ட
உதவிகளை வழங்கினார். மேலும், அவர் அனைத்து பகுதிகளிலும் சென்று தீவிரப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறார்.
🌟 முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சிகளைச் சிறப்பிக்கும் விதமாக, மாநில நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
* மாநிலப் பொதுச் செயலாளர் ஆனந்த சுப்பிரமணி
* மாநிலப் பொருளாளர் அரங்கநாதன்
* மாநில இளைஞரணிப் பார்வையாளர் சுசீந்திரன்
* மாநிலச் செயலாளர் பார்த்தசாரதி P V
இவர்களைத் தவிர, நகரச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை வெற்றி
பெறச் செய்துள்ளனர். மாவட்டத் தலைவரின் சீரிய தலைமையில், மாநிலத் தலைவரின் நேரடிப் பிரச்சாரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதால்
, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கட்சியின் செயல்பாடு பலம் பெற்றுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
16 11/2025 மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் மாநில நிறுவனத் தலைவர் திரு.ஜெயக்குமார் அவர்கள்
தலைமையில் 2026 தேர்தலுக்கான முக்கிய ஆலோசனை மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று 16 11/2025 அன்று காலை 11 மணிக்கு கோவை
மேல் மையம் அலுவலக கவுண்டம்பாளையத்தில் நடைபெற்றது
16/11/2025 - கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிக்கான பொறுப்பாளர்கள் நியமன கூட்டம் கவுண்டபாளையத்தில் நடைபெற்றது இதில்
மாநிலத் தலைவர் திரு.ஜெயக்குமார் அவர்களை மாவட்ட தலைவர் பழனிவேல் அவர்கள் வரவேற்றார் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் சண்முகராஜ்
மற்றும் மாநில துணை பொதுச் செயலாளர் ராஜேஸ்வரன் மற்றும் மாநில செயலாளர் ஆதி சரவணகுமார் மற்றும் நிழல் மைய முருகன் அவர்கள் கென்னடி பொறுப்பாளர்கள்
ஆகியோரும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் சுப்பிரமணியம் அவர்கள் மற்றும் மாநில இளைஞரணி பார்வையாளர் சுசீந்திரன்
மற்றும் மாநில துணைத்தலைவர் சிவராஜ் அவர்கள் மற்றும் மாநிலச் செயலாளர் பார்த்தசாரதி மற்றும் மாநில நிர்வாகிகள் உடன் கட்சி சார்பாக
பலரும் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் எளியவர்களுக்கு மாநில தலைவர் திரு ஜெயக்குமார் அவர்கள் நல திட்ட உதவிகளை வழங்கினார்.
08-11-2025 அரூர் சட்டமன்ற தொகுதி மொரப்பூர்-தலைவர் ச.ஜெயக்குமார் பொறுப்பாளர்களுடன் சந்திப்பு.
08/11/2025 இன்று அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொரப்பூரில் மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் பூத்
பொறுப்பாளர்களை இல்லம் சென்று சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கட்சியின் தலைவர்
ச.ஜெயக்குமார் அவர்களும் பொதுச் செயலாளர் பொருளாளர் மற்றும் மாநில மற்றும் மாவட்ட
நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
02-11-2025 அந்தியூர் சட்டமன்ற தொகுதி - தலைவர் ச.ஜெயக்குமார் பொறுப்பாளர்களுடன் சந்திப்பு.
02/11/2025 அன்று அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் மாவட்ட
பொறுப்பாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர்
ச.ஜெயக்குமார் அவர்களும் பொதுச் செயலாளர் பொருளாளர் மற்றும் மாநில மற்றும் மாவட்ட
நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.